தொட்டியம் அருகே கார் கவிழ்ந்து விபத்து : 7 பேர் காயம்

0 472
Stalin trichy visit

தொட்டியம் அருகே உள்ள மாயனூர் கதவணை பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்கு சுற்றுலா வந்திருந்த குடும்பத்தினர் கார் கவிழ்ந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

கரூர் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் செந்தில் ராஜன் (42 ). இவரது காரில் குடும்பத்தினருடன் மாயனூர் கதவணை பகுதியிலுள்ள பூங்காவில் பொழுது போக்கிற்காக குடும்பத்தினருடன் வந்துள்ளார். மீண்டும் பூங்காவில் இருந்து திரும்பியபோது சிலை பிள்ளையார் புதூர் பிரிவு அருகே கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியில் வயலில் வேலை செய்தவர்கள் காரில் இருந்த நபர்களை மீட்டனர்.

இதில் செந்தில் ராஜன் (42), சாருமதி(15), மஞ்சுளா(38), ரேணுகா (27) பூவிழி (32) உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.