ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.70 லட்சம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை
திருச்சி, ஏப்.25 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் அதன்படி இக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டு பயணிகளும் வருவது வழக்கம் அங்கு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
அவ்வாறு கோயில் உண்டியல்கள் மாதம் ஒரு முறை கணக்கிடப்படும் அதன்படி நேற்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு கருட மண்டபம் அருகே சமூக ஆர்வலர்கள் கோயில் ஊழியர்கள் பக்தர்களின் காணிக்கைகள் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 70, 03, 170/- , தங்கம் 155 கிராம் , வெள்ளி 775 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 280 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன என்று கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.