தில்லைநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 8 1/2 பவுன் நகை கொள்ளை
திருச்சி மே 8- திருச்சி தில்லை நகர் பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 49. ) இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் கார் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் மேலாளராக பணியாற்றி வருகிறார்.இவர் வழக்கம் போல் காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.பின்னர் அவரது மகள் வீட்டை பூட்டிவிட்டு அருகாமையில் உள்ள பயிற்சி மையத்துக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 8 1/2 பவுன் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ராமகிருஷ்ணன் தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.