பைக்கில் வீலிங் சாகசம் செய்த 8 பேர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் ,காணக்கிளியநல்லூர்,லால்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான திருச்சி,
சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சாலைகளில் அதிவேகத்தில் வீலிங் சாகசம் செய்தும், மோட்டார் பைக்கின் முன்புறம் பட்டாசுகளை கட்டிக்கொண்டு வீலிங் செய்து வெடிக்க வைத்து சாகசம் செய்த உட்பட 8 பேர் மீது சமயபுரம், லால்குடி, காணக்கிளிய நல்லூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.5 வாகனங்கள் பறிமுதல். ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை.
சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சாலைகளில் அதிவேகத்தில் வீலிங் செய்து சாகசம் செய்து
அதன் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.சமூக வலைதள பக்கத்தில் வெளியான வீடியோக்களை ஆய்வு செய்து வீலிங் சாகசம் செய்தவர்களை போலீசார் விசாரணை செய்து தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்சி கீழ சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் 20 வயதான வசந்த குமார்,கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் 20 வயதான கிரிட்டிஷ்குமார், சமயபுரம் அருகே பணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் 24 வயதான ஆறுமுகம் ஆகியோர் என தெரியவந்தது. அதேபோல் காணக்கிளிய நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுகனூர் கணபதி நகரை சேர்ந்த முத்துச்செல்வம் மகன் 21 வயதான சக்திவேல், சிறுகனூர் இந்திரா நகரை சேர்ந்த புஷ்பநாதன் மகன் அஜய், ஊட்டத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் அஜித்குமார் ஆகியோர் வீலிங் சாகசம் செய்தது தெரியவந்தது. மேலும் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிறுமருதூரில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய சாலையில் திருச்சி புத்தூர் கல்லாங்காட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் 24 வயதான அஜய் என்றும் இவர் தனது தம்பியின் பைக்கை சம்பவ இடத்திற்கு எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் மணிகண்டன் மோட்டார் பைக்கின் முன்புறம் தீபாவளி பட்டாசுகளை கட்டிக்கொண்டு சாலைகளில் அதிவேகத்தில் வீலிங் செய்து பட்டாசுகளை வெடித்து சாகசம் செய்து அதன் காட்சிகளை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஐடியான டெவில் ரைடர் முகவரில் பதிவிட்டதும் தெரியவந்தது. மேற்கண்ட நபர்கள் மீது சமயபுரம், காணக்கிளியநல்லூர், லால்குடி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் சாகசத்திற்கு பயன்படுத்திய 5 மோட்டார் பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து சாகசத்தில் ஈடுபட்ட அனைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.