இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 9 பேர் கைது

0 408
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 9 நபர்கள் அதிரடி கைது – சாகசம் செய்தவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமா ?

இருசக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக, சமூகவலைதளங்கள் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்காணித்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதனிடையே, தீபாவளியை ஒட்டி நம்பர் பிளேட் இல்லாத பைக்கில், ஹெல்மெட் மாட்டிய இளைஞர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பைக்கின் முன்பு வான வேடிக்கை பட்டாசுகளை கட்டிக்கொண்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்யப்பட்டது. டெவில் ரைடர்ஸ்’ என்ற இன்ஸ்டா அக்கவுன்டில் வீடியோ பகிரப்பட்டது. ‘பைக் விலாகிங்’ என்ற பெயரில் சாலையில் அத்துமீறும் இளைஞர்களால் மக்களை அச்சமடைந்தனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 4 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட, பர்ஷத் அலி ( 21) காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தச்சங்குறிச்சி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த அஜித் வயது (21) , அஜய் (20) , சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமருதூர் மேம்பாலத்தில்
இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த அஜய் மணிகண்டன் . திருச்சியை சார்ந்த சக்திவேல் , விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
அதேபோல் இலால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்த அருள்முருகன் 24, கிரித்திஸ் 20, வசந்தகுமார் 20. தேசிங்க பெருமாள் 18. ஆகியோர்கள் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்தும், அவர்கள் பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். மேலும் வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக Instagram, போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை கண்காணிக்க சமூக வலைத்தள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.