திருச்சி மாவட்டத்திற்கு 9 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்

0 360
Stalin trichy visit

திருச்சி, ஆக. 29  சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 20- ந்தேதி கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட கால்நடை வளர்போர் பயன்பெறும் விதமாக 9 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை தற்போது,கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங் களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் திருச்சி நகர் பகுதிக்கு 1, லால்குடி பகுதிக்கு 2, முசிறி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிக்கு தலா 3 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர்,ஒரு ஓட்டுனர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த  மருத்துவ வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணி களை மேற்கொள்ளவும், பிற்பகலில் கால்சென்டர்மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளைமேற்கொள்ளவும் உள்ளனர்.

கால்நடைகளுக்கு  அவசர சிகிச்சை தேவைப்பட்டால் 1962 என்ற கட் டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுத்தால் வீடுதேடி வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.