வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகைகளை திருடிய திருடனை 24 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்

0 453
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 13  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டாத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செங்குட்டுவன்.  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகாம்பூரில் நடைபெற்ற உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்  வீட்டை பூட்டிவிட்டு
சென்று உள்ளனர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் செங்குட்டுவன் மற்றும் அவரது மனைவி சுகுணா தேவி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 சவரன் நகை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து சுகுணா தேவி துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே ஊரை சேர்ந்த திவாகர் என்பவன் செங்குட்டுவனின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியது தெரியவந்தது அவனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார் திருடு போன 24 மணி நேரத்தில் திருடனை கண்டுபிடித்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஷின் திறமையை பாராட்டி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.