திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் பாரம்பரிய மையம் திறப்பு
திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) இயக்குநர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் முன்னிலையில் பாரம்பரிய மையத்தை (ஹெரிடேஜ் சென்டர்) ஆளுநர் குழுவின் தலைவர் பாஸ்கர் பட் திறந்து வைத்த அவர், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களில் தனது அனுபவத்தை எடுத்துரைத்தார்.

முன்னாள் மாணவர்கள் மற்றும் நிறுவனத்தின் கூட்டு முயற்சியான இந்த மையம், திருச்சி என்.ஐ.டி.யின் 56 ஆண்டுகளைக் காட்சிப்படுத்துகிறது. ரிகால் தலைவர் மகாலிங்கம், இந்த மையம் அமைப்பதற்கு நிதி திரட்டிய முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
என்.ஐ.டி. இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் பேசுகையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக விளங்கும் என்.ஐ.டி. திருச்சி மாவட்டத்தின் பரிணாம வளர்ச்சியின் ஆடியோ-விஷுவல் கணக்கை பாரம்பரிய மையம் வழங்கும் என்றார். ஹெரிடேஜ் சென்டரின் கட்டிடக் கலைஞர் ஜோசப் ஆஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், இந்த நிகழ்வின் நினைவாக, ‘தி ரோட் அஹெட்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.