கம்பரசம்பேட்டை, மெயின்கார்டுகேட் பகுதிகளில் 27ந் தேதி மின் நிறுத்தம்

0 291
Stalin trichy visit

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கம்பரசம்பேட்டை மற்றும் மெயின்கார்டுகேட் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் தொடரமைப்பு மின் சுற்றில் பழுது நீக்கும் பணி நடைபெற இருப்பதால் 27-ந் தேதி(சனிக்கிழமை) மாநகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகளான கரூர் பைபாஸ்ரோடு, பழைய கரூர்ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில்தெரு, சிதம்பரம் மகால், பூசாரித்தெரு, சத்திரம் பஸ்நிலையம், புனித ஜோசப் கல்லூரிச்சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள்தெரு, நந்திகோவில்தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரீஸ்தியேட்டர், கோட்டை ஸ்டேசன்ரோடு, சாலைரோடு, வாத்துக்காரத்தெரு, முதலியார்தெரு, உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லைத்தெரு,

குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர்காலனி, டி.டி.ரோடு, சோழராஜபுரம், வி.எஸ்.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன்தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோஷ்கார்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேஸ்வரம், மாம்பழச்சாலைரோடு, புதுத்தெரு, கலெக்டர் வெல், பொன்மலை, ராமநாதபுரம், எச்.ஏ.பி.பி. முதலிய குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம், சங்கரன்பிள்ளைரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் உள்ளிட்ட இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.