திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டு முதியவர் பலி!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி, அருகில் தெத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குதெத்தூரை சேர்ந்த இலட்சுமணன்(80)

இவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடி உள்ளனர். இந்த நிலையில் இன்று ஊரின் அருகே உள்ள பாலாறு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில்… ஆற்றில் சடலமாக கிடந்த லட்சுமணன்… தனது தோட்டத்திற்கு ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வப்போது சென்றுகொண்டிருந்தபோது ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் தெரிவித்தனர்.

மேலும் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்