பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஸ்

0 554
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி, பொன்னம்பட்டி பேரூர் சார்பில் MJ மஹாலில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் மற்றும் பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் வருவாய் துறையினர் மற்றும் பிற துறையினர் கலந்து கொண்டனர். மேலும் பெறப்பட்ட மனுக்களை துறை வாரியாக பிரித்து தருவதாக தெரிவிக்கப்பட்டது.

அருகில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்களும், தெற்கு மாவட்ட பொருளாளர், தெற்கு ஒன்றிய செயலாளர் சின்ன அடைக்கண், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, பொன்னம்பட்டி பேரூர் செயலாளர் பழ.கருப்பையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் ராஜாமுகமது, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.C.பழனிச்சாமி, மும்பை நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஷ்ணுவர்தன் மற்றும் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்களும் மனுக்களை கொடுப்பதற்காக கலந்தாய்வு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.