மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 3ந் தேதி முதல் நடக்கிறது

0 243
Stalin trichy visit

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி பெருநகர மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் டிசம்பர்2021 மாதம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது. முசிறி கோட்டத்தில் 3ந் தேதியும், துறையூர் கோட்டத்தில் 7ந் தேதியும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 10ந் தேதியும், லால்குடி கோட்டத்தில் 14ந் தேதியும், திருச்சி கிழக்கு கோட்டத்தில் 17ந் தேதியும், திருச்சி நகரிய கோட்டத்தில் 21ந் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 28ந் தேதியும் முகாம் நடக்கிறது. எனவே இந்த மாதத்தில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.