இன்று நடைபெற இருந்த போலீசார் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது

0 260
Stalin trichy visit

திருச்சியில் மத்திய மண்டல அளவில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருந்த போலீசாருக்கான குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யபட்டு நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி , புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட போலீசார் கலந்து கொள்கின்றனர்.

 

இந்த கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பணியில் உள்ள போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என்று 9 மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.