கல்லூரி சென்ற மாணவி மாயம்

0 337
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை சுமார் 7 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீசார் யாரேனும் கடத்திச் சென்று விட்டார்களா ? என்று விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரிக்குச் சென்ற சிறுமியை மீண்டும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.