திமுகவை கண்டித்து திருச்சியில் வீடுவீடாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – அதிமுக தீர்மானம்!

0 439
Stalin trichy visit

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீட்
தேர்வு ரத்து, கட்டுமானப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்துவது, பெட்ரோல் விலை ரூ.5ம், டீசல் விலை ரூ. 4ம் குறைப்பது,சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவது, தடையில்லா மின்சாரம் வழங்குவது, குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்குவது,

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவது போன்ற தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை உடனடியாக தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும். தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கை களையவும் அதிமுக தலைமை அறிவிப்பின்படி வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏற்றி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமை குரல்களாய் ஒலிக்க செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.