திருச்சி அருகே அணுகு சாலை அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

0 425
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வடுகர்பேட்டையில் அணுகுசாலை,சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணியானது தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையிலகோவன்டா குறிச்சி  ஊராட்சி வடுகர்பேட்டை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சாலையை கடந்து விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் கல்லறைக்கு செல்வதற்கும், 300 வருடம் பழமை வாய்ந்த ஆலயத்திற்கும் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவிகளும் சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலையைக் கடப்பதற்கு பொதுவான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பாதுகாப்பான அனுகுசாலை,சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் சாலையைக் கடப்பதற்கு எங்களுக்கு உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg

Leave A Reply

Your email address will not be published.