சரக்கு வேன் மீது கார் மோதி 2 பேர் பலி

0 415
Stalin trichy visit

பெரியகுளத்தில் இருந்து 5 பேர் ஒரு காரில் திருச்சிக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து நேற்று இரவு பெரியகுளம் நோக்கி புறப்பட்டு சென்றனர். கார் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் சென்ற அன்னக்கொடி மாயன், அஸ்லாம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேல்முருகன், சிவக்குமார், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.