திருச்சியில் 6 பேர் மீது குண்டாஸ்; காவல் ஆணையர் எச்சரிக்கை
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின் பேரில், 28.11.21-ந்தேதி திருச்சி மாநகரம், ஏர்போர்¢ட் காவல் நிலையம்வயர்லெஸ்ரோட்டில் நடந்து சென்றவரிடம் பாபு (எ) மிட்டாய்பாபு என்பவர் கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்றது தொடர்பாக வழக்குபதிவு செய்து, நீதிமன்றகாவலுக்கு அனுப்பப்பட்டார். 28.11.21-ந்தேதி அமர்வு நீதிமன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிராட்டியூர் அருகில், சுரேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிகொலை செய்ய முயற்சி செய்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்றகாவலுக்கு அனுப்பப்பட்டார்.
03.12.21ந்தேதி கோட்டை குற்றப்பிரிவுகாவல் நிலையம் அண்ணாசிலை அருகில் நடந்து சென்றவரிடம் விஜயகுமார் என்பவர் கத்தியை காண்பித்துபணம் பறித்து சென்றதற்காக வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்றகாவலுக்கு அனுப்பப்பட்டார். 08.12.21-ந்தேதி அரசுமருத்துவமனைகாவல் நிலையஎல்லைக்குட்பட்ட பெரியார் மாளிகை அருகில், சாலையில் நடந்து சென்றவரிடம் தக்காளிமுபாரக் முகமதுமுபாரக் என்பவர் கத்தியைகாண்பித்து பணம் பறித்து சென்றது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். 11.11.21-ந் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், மணிகண்டன் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு, கோபாலகிருஷ்ணன்(வயது 20) என்பவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். 30.11.21-ந்தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமுதாய கட்டணகழிப்பிடம் அருகில், கஞ்சாவிற்பனை செய்ததது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு, தினேஷ்குமார் என்பவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் விசாரணையில் மேற்படி வழக்குகளின் குற்றவாளிகளான பாபு (எ) மிட்டாய்பாபு மீது பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகளும், சுரேஷ் மீது 2 வழக்குகளும், விஜயகுமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 43 வழக்குகளும், தக்காளிமுபாரக் முகமதுமுபாரக் மீதுபல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகளும், கோபாலகிருஷ்ணன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், தினேஷ்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 21 வழக்குகளும் நிலுவையில் இருப்பதுதெரிய வந்தது.
எனவே,மேற்படி பாபு (எ) மிட்டாய்பாபு, சுரேஷ், விஜயகுமார், தக்காளிமுபாரக் முகமதுமுபாரக், கோபாலகிருஷ்ணன், தினேஷ்குமார் ஆகியோர்¢கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரியவருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகரகாவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் அவர்களுக்க குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகரகாவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.