திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் அப்துல் சமத் என்பவர் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடைக்கு திருச்சி பெரியமிளகு பாறையை சேர்ந்த வினோத் குமார்(வயது 22), அவரது தம்பி அஜித்குமார்(வயது 22) ஆகியோர் துணிகளை வாங்கிக்கொண்டு அதற்கு பணம் தர மறுத்து அப்துல் சமதை கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்த மத்திய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி, துணிக்கடைக்கு சென்று 2 பேரிடமும் விசாரித்தார். அப்போது வீரமணியையும் கத்தியை காட்டி மிரட்டினர். இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.