மாரியாயி கும்பிடும் நிகழ்ச்சி

0 320
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தொட்டியம் கடை வீதியில் அமைந்துள்ள பகவதிஅம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மாரியாயி கும்பிடும் நிகழ்ச்சி கடந்த 24ம் தேதி ஊர்சாற்றுமுறையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாரியாயி கும்பிடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. தொட்டியம் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுதோறும் மாவிளக்கு எடுத்து வந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இதேபோல தொட்டியம் மதுரா நகரில் அமைந்துள்ள அய்யப்பன் ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவில் காலை அய்யப்பனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேற பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆராதனைகளும் இரவு உற்சவர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.