ஆசிரியர்களின் செயலாராய்ச்சி அறிக்கை சமர்பித்தல் பயிலரங்கு

0 454
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட அளவிலான ஆசிரியர்களின் செயலாராய்ச்சி அறிக்கை சமர்பித்தல் பயிலரங்கு செயவாராய்ச்சி குழு தலைவர் மற்றும் இந்நிறுவன முதல்வர் எஸ்.வின்சென்ட்டி பால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை முதல்வர் பொ.இளவரசு வரவேற்புரை வழங்கினார். இந்நிறுவன முதல்வர் செயலாராய்ச்சி பரவலாக்குதல் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கினார். இந்நிகழ்வில் இந்நிறுவனத்தை சார்ந்த கல்வியாளர்கள் மற்றும் 19 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் மாணவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களையும் பொருட்டு செயலாராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இச்செயலாராய்ச்சி கோவிட்-19 காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவேளியை குறைக்கும் பொருட்டும் மாணவர்களின் கற்றல் அடைவு திறனை மேம்படுத்தும் பொருட்டும் ஆசிரியர்களால் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இப்பயிலரங்கில் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட செயலாராய்ச்சி முடிவுகளை காணொளி மற்றும் Power Point மூலம் சமர்பித்தனர். இதன் மூலம் ஆசிரியர்கள் வகுப்பறையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண முடியும் என்பதை சக ஆசிரியர்கள் உணர்ந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.