கல்லூரி மாணவி மாயம்
திருச்சி கோட்டை சிந்தாமணி பஜார் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் ஹென்றிக்பெரீஸ்(வயது 22). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி துணி எடுப்பதற்காக தனது தங்கையுடன் சிங்காரத்தோபிற்கு சென்றார்.
கடையில் துணி எடுத்து கொண்டிருந்தபோது திடீரென ஹென்றிக்பெரீஸ் மாயமானார். அவரது தங்கை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.