திருச்சியில் முதல்வரின் வருகையில் முகம் சுழிக்க வைத்த கலைநிகழ்ச்சிகள்
இன்று காலை தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிறகு திருச்சி தாயனூர் அருகே உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்28.24 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம்,ரூ11.36 கோடியில் லேசர் லைட் உள்ளிட்ட மலை கோட்டையை அழகுபடுத்தும் பணி,ரூபாய் 10 கோடியில் ரைபிள் கிளப் உள்ளிட்ட 10 துறைகளைச் சேர்ந்த ரூ 153 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதற்காக திருச்சி வந்தார்.

அப்போது தமிழக முதல்வரின் வருகைக்காக திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டுப்புறக்கலைகள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் வழிநெடுகிலும் நடத்தப்பட்டது. இதில் ஒரு சில இடங்களில் ஆடலும் பாடலும் கூடிய நிகழ்ச்சிகள் அரைகுறை உடையுடன் பெண்கள் ஆடிய நடனம் முகம் சுளிக்க கூடிய வகையில் அமைந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.