திருவண்ணாமலை மாவட்டம், ஏம்பலம் நரிக்குறவர் தெருவை சேர்ந்தவர் சபரீசன்(வயது 21) மற்றும் தாம்பரம் கடம்பேரி பகுதியை சேர்ந்தவர் நிஷாநந்தினி(வயது 20) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை துறையூர் பஸ் நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஒரு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இருப்பதாகவும், தங்களுக்கு ரூம் வேண்டும் என்றுகேட்டு தங்கி உள்ளார்கள்.
இந்நிலையில் காலையில் தங்கும் விடுதி ஊழியர்கள் காலை உணவு வாங்கி கொடுத்துள்ளார்கள். பின்பு மதிய உணவு அவர்களே வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஒருநாள் மட்டுமே தங்குவதற்கு ரூம் வாடகைக்கு எடுத்திருந்த நிலையில் ரூமை காலி நேரம் ஆகியும் ரூமை காலி செய்யவில்லை என்றுவிடுதி ஊழியர்கள் நேரில் சென்று ரூமின் கதவை தட்டி உள்ளார்கள். அப்பொழுது வெகுநேரமாக தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊரியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சபரீசன் மற்றும் நிஷா நந்தினி ஆகியோர் மூக்கில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் படுக்கையில் கிடந்து உள்ளார்கள்.
இதுபற்றி தனியார் விடுதி ஊழியர்கள் துறையூர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்ததன் பேரில் தகவல் அறிந்த துறையூர் போலீசார் மற்றும் முசிறி உதவி கண்காணிப்பாளர் அருள்மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் எதற்காக துறையூர் வந்தார்கள் என்று விசாரித்த பொழுது நிஷா நந்தினி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், தாம்பரம் காவல் நிலையத்தில் ரஞ்சித் தனது மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.