மயக்க மருந்து தடவிய கேக் கொடுத்து 9¼ பவுன் நகை அபேஸ்

0 445
Stalin trichy visit

கரூர் மாவட்டம் குளித்தலை நெய்தலூரை சேர்ந்த மதியரசனின் மனைவி புஷ்பவல்லி(வயது 50). இவர் சம்பவத்தன்று காரைக்காலில் இருந்து திருச்சிக்கு பஸ்சில் வந்தார். வழியில் கும்பகோணத்தில் அந்த பஸ்சில் ஏறிய ஒரு பெண், புஷ்பவல்லிக்கு மயக்க மருந்து கலந்த கேக் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் பஸ்சில் மயங்கி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 9¼ பவுன் நகைகளை அந்த பெண் திருடிச்சென்றுவிட்டார்.

மயக்கம் தெளிந்து அவர் பார்த்த போது, பஸ் திருச்சி மத்திய பஸ்நிலையத்துக்கு வந்துவிட்டது. அப்போது தான், அவருக்கு நகைகளை பறி கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் மயக்க கேக் கொடுத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம பெண்ணை தேடி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.