முக்கொம்பு சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடல்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்த துவங்கியுள்ளது.

திருச்சியில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முக்கொம்பு சுற்றுலா தளம் நோய்த்தொற்று நடவடிக்கையாக தற்காலிகமாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. மேலும் முக்கொம்பு பூங்கா பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்