மாநில அளவிலான செஸ் போட்டியில் தொட்டியம் மாணவி 2ம் இடம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் சந்தைப்பேட்டை அழகுநாச்சிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி என்.நிலா திருச்சியில் நடந்த 5-வது மாநில அளவிலான பொது மற்றும் குழந்தைகளுக்கான செஸ் போட்டிகளில் 15-வயது முதல் 25-வயது வரையிலான பெண்கள் பிரிவில் கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
இவர் கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகள், மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும், பக்கங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கு பல்வேறு தரப்பு மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.