ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு

0 410
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கும், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டிற்கான ஊரக வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டதற்கு இணங்க, (அரசாணை எண்.132), அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000- த்திலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.