நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சியில் பணியமர்த்தல் ஆணை!
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகர சேர்ந்த 11 நபர்களுக்கு பணியமர்த்தல் ஆணை இன்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தேர்வு செய்யப்பட்ட நல்லையா, கிருஷ்ணவேணி, சத்யா, கோபிநாத், ஜானகிராமன், ஜீவிதா, கவிதா, பிரசாத், நவீன்ராஜ், ஆதித்யா, மற்றும் பூவிழிப்ரபா ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி, பொறுப்பு அதிகாரியாக நடந்துகொள்ளவேண்டும், எந்தவித சிபாரிசும் இன்றி வருபவர்களுக்கு உதவியை செய்ய வேண்டுமென்றும் நேர்மையுடனும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும் என அறிவுரை கூறி பணியமர்த்தல் ஆணை வழங்கினார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…. https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA