மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சுரோல் ஏற்றி சென்ற லாரி திருச்சியில் விபத்து!
திருச்சி மணிகண்டம் அருகே நாகமங்கலம் பகுதியில் இன்று அதிகாலை மகாராஷ்டிராவில் இருந்து விருதுநகருக்கு பஞ்சுரோல் ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானது.
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலத்தில் உள்ள உயர்மட்ட பாலத்தில் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் பாலத்தின் ஓரத்தில் விட்டு விபத்துக்கு உள்ளாக்கினார்.

தகவலறிந்த மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாற்று லாரி வர வைக்கப்பட்டு பஞ்சுரோல் ஏற்றி அனுப்பப்பட்டது. இதில் டிரைவருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA