மயானங்களில் இறுதிச் சடங்கிற்கு கூடுதல் கட்டணம்: நடவடிக்கை தமிழக முதல்வருக்கு பெண் வழக்கறிஞர் கோரிக்கை மனு

0 926
Stalin trichy visit

பேரண்ட்ஸ் அறக்கட்டளை வழக்குரைஞர் ஜெயந்திராணி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்குரைஞர் சித்ரா ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்புயிள்ள கடிதத்தில் மனித இறப்புக்குப் பின்னர் உடல் சிதைவடையத் தொடங்குகிறது. மனிதர்களின் இறப்பு பொதுவாக சோகமான அல்லது விரும்பத்தகாத நிகழ்வாகக் கருதப்படுகிறது, இறந்திருப்பவருடனான பாசம் மற்றும் இறந்தவருடன் சமூக மற்றும் குடும்ப உறவுகளை தொடர முடியாமை போன்ற இழப்புகள் இதற்குக் காரணமாக அமைகின்றன. இதைத்தவிர மரணபயம் , மரணம் தொடர்பான பயம், துயரம், துக்கம், மனவலி உணர்வு, மனத்தளர்ச்சி, மன அழுத்தம், பரிவு, இரக்கம் , தனிமை போன்ற நிகழ்வுகளும் இறந்தவருடன் தொடர்புடையவர்களுக்கு ஏற்படுகின்றன. கொரொனா பெருந் தொற்று பேரிடர் காலங்களில் மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தும் இந் நேரத்தில், மயானங்களில் பலமடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது.திருச்சிராப்பள்ளியில் மயானங்களில் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. பொதுவாக மயானங்களில் மின் தகனம், எரிவாயு தகனம், விராட்டி தகனம், புதைப்பது என இறுதி நல்லடக்கம் அல்லது எரியூட்டானது அவரவர் சம்பிரதாயப்படி நடத்தப் படுகிறது. இதில் மின் தகனத்திற்கு ரூ2500/- எரிவாயு தகனத்திற்கு ரூ2500/- விராட்டி மூலம் எரிப்பதற்கு ரூ5000/- புதைப்பதற்கு ரூ2500/- வசூல் செய்யப்படுகின்றது. மேலும் இதைத்தவிர கையூட்டும் பெறப்படுகிறது. அதுமட்டுமின்றி பால் தெளித்தலுக்கு ரூ1500/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரொனா பெருந்தோற்று பேரிடர் காலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ஊதியத்தை இழந்து, உறவை இழந்து தவிக்கும் ஒவ்வொருவருக்கும் இறுதிச் சடங்கு மயான நிகழ்வே ரூபாய்15 ஆயிரத்திற்கும் மேல் செலவாகின்றது.மயானங்களில் வசூலிக்கப்படும் மேற்படி இறுதி சடங்கு கட்டணங்களுக்கு முறையாக ரசீதும் வழங்கப்படுவது கிடையாது.நெருக்கடியான இப்பேரிடர் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்தும் இறுதிச் சடங்கு கட்டணத்தை முறைப்படுத்தவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

 

Leave A Reply

Your email address will not be published.