லால்குடி அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் ஆய்வு செய்தார்.

0 213
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இன்று நேரில் ஆய்வு செய்து மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார் அதன்படி லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் லால்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை அறைகளை நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் லால்குடி வட்டார மருத்துவ அலுவலர் செழியன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் துரை மாணிக்கம் மற்றும் லால்குடி வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்

 

Leave A Reply

Your email address will not be published.