திருச்சியில் திருநங்கைகளால் தொடங்கப்பட்ட உணவகம் – நேரில் சென்று வாழ்த்திய எம்எல்ஏ!
திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் அருகே புதிதாக தொடங்கப்பட்ட மாலைநேர நடமாடும் உணவகம் திருநங்கைகள் கொண்ட குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள ரியா, சய்சா, பர்வீன், மாயா, நமீதா, ஹரிணி ஆகிய படித்த பட்டதாரி திருநங்கைகளால் தொடங்கப்பட்ட இந்த உணவகம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை அறிந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் குழுவின் அமைப்பாளர் மற்றும் குழுவினரின் தன்னம்பிக்கையை நேரில் சென்று பாராட்டினார்.

பின்பு தமிழக முதலமைச்சர் திருநங்கைகளுக்கான தனி நலவாரியம் அமைத்து வாழ்வாதாரத்தை செம்மைப்படுத்த பல திட்டங்கள் உள்ளதாகவும், உங்களுக்கு தேவைப்படும் உதவிகளை இயன்ற அளவு செய்து தருவேன் எனவும் நம்பிக்கை கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர்கள் மணிவேல்,ஜாபர் அலி, பன்னீர்செல்வம் கணேசமூர்த்தி வீரமணி, நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8