முசிறியில் அறிவியல் ஆய்வகம் – அமைச்சர் திறந்து வைத்தார்!

0 454
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் ஒன்றியத்தில் உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “அடல் டிங்கரிங் லேப்” என்கிற தொழிற்கல்விக்கான அறிவியல் ஆய்வகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாகப் பள்ளியில் உள்ள ஆய்வகம், நூலகம், வகுப்பறை மற்றும் கழிவறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு பள்ளியில் நடைபெற்ற விழாவில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகையினை அமைச்சர் வழங்கினார்‌‌

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர், முசிறி துணை ஆட்சியர், முசிறி மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.