திருச்சி அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகளோடு இதயம் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது – டீன் வனிதா பேட்டி!

0 484
Stalin trichy visit

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை முதல்வர் வனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிகையில்…”திருச்சி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் சிறப்பாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 24 மணி நேரமும் இருதய சிகிச்சை பிரிவில் பொதுமக்களுக்கு சேவையை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை பேராசிரியர்கள் தங்கு தடையின்றி வழங்கி வருகின்றனர்.

மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படும்போது இருதயத்தில் அடைப்பு அல்லது சுருக்கம் ஏற்படும், அதுபோன்ற நேரங்களில் உடனடியாக பொதுமக்கள் அரசு மருத்துவமனை நாடும் போது இரண்டு விதமான சிகிச்சை முறைகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது,திருச்சி அரசு மருத்துவமனைக்கு இருதய சிகிச்சைக்காக புதிதாக இரண்டு நவீன கருவிகளை வாங்கியுள்ளோம். இந்த இரண்டு முறையான சிகிச்சையின் வாயிலாக மாரடைப்பு பிரச்சனையால் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த அதி நவீன கருவியின் மூலம் இதுவரை 7 பேர் சிகிச்சை பெற்று வீடு களுக்கு திரும்பியுள்ளனர்.

இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் எடுத்துக்கொண்டால் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் செலவாகும், ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் இலவசமாக பொதுமக்களுக்கு இந்த சேவையை செய்து வருகிறோம். இந்த புதிய கருவிகள் மூலம் இருதயத்தில் எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதனை ஆராய்ந்து இரத்த ஓட்டத்தை எப்படி சீர் செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டு சுலபாமாக கையாள முடியும்” என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ் மற்றும் இருதய சிகிச்சை துறை பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

 

Leave A Reply

Your email address will not be published.