லால்குடி கூகூர் சாலையில் பால் கடையில் தீ விபத்து : ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
கூகூர் சாலையில் கேஸ் கசிவால் பால் கடையில் தீ விபத்து.பொருட்கள் எரிந்து சேதம். திருச்சி மாவட்டம் லால்குடி கூகூர் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபம் அருகே பால் கடையில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம். லால்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த பழனியாண்டி மகன் சக்திவேல்.இவர் கூகூர் சாலையில் பால் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பால்கடைகளுக்கு அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையால் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டது.பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மின் இணைப்பு வந்தது. மின்சாரம் வந்தவுடன் கடைகாரர் கேஸ் அடுப்பை பற்ற்வைத்துள்ளார்.கடையில் இருந்த சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக் கொண்டது. உடனே லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அலமாரி,மளிகை பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின