மாணவர்களுக்கு நூலகம் அமைத்து தருவதாக திமுக வேட்பாளர் பன்னீர்செல்வன் வாக்குறுதி!

0 430
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 12வது வார்டு திமுக வேட்பாளர் பன்னீர்செல்வன் தனது வார்டுக்கு உட்பட்ட அண்ணா சிலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கட்சி தொண்டர்கள் சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது பன்னீர்செல்வன் கூறுகையில், வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து தரப்படும். படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.