வார்டுக்கு உட்பட்ட பகுதியிலேயே வேலைவாய்ப்பு முகாம்; வேட்பாளர் சீனிவாசன் பிரச்சாரம்!
திருச்சி மாநகராட்சி 34வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் கீழ கிருஷ்ணன்கோவில் தெரு மற்றும் கீழப்புதூர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளர் சீனிவாகன் கூறுகையில், படித்த வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வார்டுக்கு உட்பட்ட பகுதியிலேயே வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். குண்டும், குழியுமான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு தார் சாலையாக மாற்றப்படும்.

குடிநீர் சம்பந்தமான பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்த்துவைக்க திறம்பட செயல்படுவேன் என மக்கள் சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். முன்னதாக வேட்பாளர் சீனிவாசன் சென்ற இடம் எல்லாம் உற்சாக வரறேப்பு அளிக்கப்பட்டது.