ரயிலில் கடத்திவரப்பட்ட மதுபாடில்கள் பறிமுதல்!

0 393
Stalin trichy visit

காரைகாலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், தஞ்சை மாவட்டம் பூதலூர் ரயில் நிலையத்தில் வந்தபோது ரயில்வே போலீசார் மற்றும் குற்ற தடுப்பு துப்பறியும் பரிவு போலீஸ் உதவி துணை இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் அந்த ரயிலில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது அந்த ரயிலில் ஒரு பை இருந்தது. அந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் சட்ட விரோதமாக 18 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.