காட்டூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு

0 592
Stalin trichy visit

காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் துவாக்குடி நகராட்சி, கூத்தைப்பார் பேரூராட்சி, பொன்னம்பட்டி பேரூராட்சி, சிறுகமணி பேரூராட்சி ஆகியவற்றுக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவுற்றது. இதில் துவாக்குடி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக 14, மதிமுக 1, அதிமுக 1, அமமுக1, விசிக 1, சுயேச்சை 3 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றது.
சிறுகமணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 8, அதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேட்சை 4 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் கூத்தைபார் பேரூராட்சியில் 18 வார்டுகளில் திமுக 14 , காங்கிரஸ் 1, சிபிஐ 1, சிபிஎம் 1, மதிமுக 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பொன்னம்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுயேட்சை 6, திமுக 4, அதிமுக 2, விசிக 1, மனிதநேய மக்கள் கட்சி 1, தேமுதிக 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.