தேர்தல் கட்டுப்பாட்டு அறை கலைப்பு!

0 444
Stalin trichy visit

திருச்சி மாநகரில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாதவர்கள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறை கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.
ஒரு உதவி கமிஷனர், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 10 போலீசார் இந்த கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

நேற்றுடன் இந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் பணிகள் நிறை வடைந்தது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த காவல் கட்டுப்பாட்டு அறை கலைக்கப்பட்டது. இங்கு பணியில் இருந்த போலீசார் முன்பு பணியாற்றிய பணிகளுக்கு திரும்பி அனுப்பப்பட்டனர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.