சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

0 419
Stalin trichy visit

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் பிச்சை. இவரது மகன் ஆசிக்(வயது 19). இவர் கடந்த மாதம் திருச்சி கோர்ட்டு அருகே உள்ள சாலையில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மணலில் திடீரென சறுக்கி கீழே விழுந்தார். இதில் ஆசிக்கின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.