திருச்சி கல்லுக்குழி கள்ளர் தெருவை சேர்ந்தவர் கரண். இவர் திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் திருச்சி கல்லுக்குழி ரெயில்வே காலனி அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த சிலர் இவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர்.
பின்னர் அவர் சத்தம் போடவே அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் செயினை பறிக்க முயன்ற பிரசன்னா, கோவிந்தன், சேது ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.