உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டுத்தரக்கோரி தாய் கதறல்!

0 264
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சமயபரம் அருகே நெ.1 டோல்கேட் திருவெள்ளுவர் அவன்யூ பகுதியை சேர்ந்த சேவியர் மேகலா தம்பதியரின் மகன் 23 வயதான சந்தோஷ் சுசிர் லாட்டிமர். இவர் உக்ரைனில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அவர் அங்கு சிக்கி தவித்து வருகிறார். இது குறித்து மாணவனின் தாய் கூறியதாவது;-
எனது மகனுக்கு படிப்பு முடிவதற்கு இன்னும் மூன்று மாதமே உள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய நடத்திவரும் போரினால் எனது மகன் உட்பட அங்கு படித்து வரும் மாணவர்கள் மற்றும் தொழிலுக்காகச் சென்ற தமிழர்கள் அனைவரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் தமிழக மற்றும் இந்திய மாணவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக பதுங்குக்குழிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களை மீட்டு அவரவர் பெற்றோர்களிடம் கொண்டுவந்து சேர்க்க மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்கள் ஊர்வந்துசேர ஆகும் பயண செலவினங்களை தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. முதலமைச்சருக்கு அனைத்து பெற்றோர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என சந்தோஷ் சுசிர் லாட்டிமர் தாய் மேகலா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.