தென் மண்டல பல்கலைக்கழக கைப்பந்து போட்டி: நாளை பரிசளிப்பு

0 296
Stalin trichy visit

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்து (ஹேண்ட்பால்) போட்டி நடக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் யோகா துறை சார்பில் நடக்கும் கைப்பந்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்:

* மதுரை பல்கலைக்கழகம் 18-11 என்ற புள்ளி கணக்கில் ஆந்திரா பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 24-5 என்ற புள்ளி கணக்கில் கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது.

* ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் 24-9 என்ற புள்ளி கணக்கில் கோவை அவினாசி பல்க லைக்கழகத்தை வென்றது.

* சென்னை பல்கலைக்கழகம் 17 – 12 என்ற புள்ளி கணக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை வென்றது.

போட்டிகள் இன்றும் நடக்கின்றன. நாளை இறுதிச்சுற்று லீக் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.