திருச்சி மாவட்டம், துறையூர் பச்சமலை வன்னாடு புதூர் கோரையாற்று அருவியில் கடலூர் மாவட்டம் ஓமக்குலம் பகுதியை சோ்ந்த சிவில் என்ஜினீயரிங் பயிலும் மாணவா் ஹரிஹரன் தனது நண்பா்கள் 6 பேருடன் குளிக்க வந்துள்ளனா். அருவியில் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹரிஹரனுக்கு நீச்சல்

தெரியாததால் நீரில் மூழ்கினார். இதுக்குறித்து பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டனா். மேலும் இதுக்குறித்து துறையூர் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெயில் காலம் ஆரம்பம் ஆகி உள்ள நிலையில் கொல்லிமலை மற்றும் பச்சமலை அருவிகளுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் வருவார்கள் என்பதால் குற்றாலம் போன்ற ஊர்களில் பாதுகாப்பிற்காக கம்பி வேலிகள் அமைத்திருப்பதை போல இந்த அருவிகளிலும் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கையாக முன் வைக்கின்றனர்.