விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு!

0 426
Stalin trichy visit

காவிரி, கொள்ளிடம் ஆற்று மணலை பாதுகாக்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடகாவும், கேரளாவும் தமிழகத்துக்கு தண்ணீர் தரமறுத்து, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் கலக்க விடுகின்றனர். எனவே காவிரி, கொள்ளிடம் ஆறுகளிலிருந்து மணலை கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் லாரிகள் மூலம் மணல் அள்ள அரசு அனுமதி அளிக்கக்கூடாது. விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சாகுபடி செய்ய உழவு செய்ய முடியாமல் முட்டிக் கொண்டுள்ள பாறைகளை அகற்றும் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைப்பது ஜனநாயகமா?. இதற்கு எங்கே சென்று நியாயம் கேட்பது. இவ்வாறு பல்வேறு கோரிக்கை களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.