மண்ணச்சநல்லூர் லாரி உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் குண்டாஸ் பாய்ந்தது

0 441
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகர் 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் 32 வயதான சதீஷ்குமார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார். கடந்த ஜனவரி மாதம் இவரும் இவருடைய நண்பர்கள் சிலரும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது போதையின் உச்சத்தில் இருந்த சதீஷ்குமாரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து உடலை அந்த ஏரியில் கல்லைக்கட்டி மூழ்கடித்து விட்டுச் சென்றனர். இன்னிலையில் சதீஷ்குமாரின் அண்ணன் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் தம்பியை காணவில்லை என புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் தேடி வந்தனர். அப்போது ஈச்சம்பட்டி ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவத்திற்கு சென்ற போலீஸார் அங்கு உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில் காணாமல் போன சதீஷ்குமார் என தெரியவந்தது .இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 34 கொத்தனார்ராஜா, 30 வயதான பாண்டி என்கின்ற சுரேஷ் பாண்டி, புல்லட் ராஜா என்கின்ற நல்ல ராஜா, 19 வயதான அரவிந்த்சாமி, 45 வயதான ஷேக்அப்துல்லா,பிச்சைமணி ஆகிய 6 பேரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.கொலை குறித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சதீஷ்குமாரின் தாய் 63 வயதான அம்சவல்லியும் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணையில் அம்சவல்லிக்கு சொந்தமான இடத்தை 1.25 கோடிக்கு விற்று அண்ணன், தம்பி இருவருக்கும் தலா 40 லட்சம் பணம் பங்கு பிரித்து கொடுத்துள்ளார்.இதில் சதீஷ்குமார் அந்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு மீண்டும் தாய் அம்சவள்ளியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் சதீஷ்குமாரின் தொந்தரவு தாங்க முடியாத அம்சவல்லி கூலிப்படையை வைத்து சதீஷ்குமாரை கொலை செய்ய ரூபாய் 5 லட்சம் பேசி 20,000 அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அம்சவல்லி கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கைதான 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்னர். இந்நிலையில் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த 48 வயதான பிச்சைமுத்து,மற்றும் 45 வயதான ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றம் செய்பவர்கள் என்று மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் சிவராசு குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.அதற்கான நகல் சிறையில் இருக்கும் இருவருக்கும் வழங்கப்பட்டது. இதேபோல கடந்த வாரம் ராஜா,மற்றும் சுரேஷ் பாண்டி புல்லட்ராஜா என்கின்ற நளராஜா ஆகியோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.