10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
2020 ஆம் ஆண்டிலிருந்து கொரோனா பரவல் காரணமாக 10, 11 ,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது. 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே.6-ல் தொடங்கி மே.30ம் வரை நடைபெறும் என்றும், 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே.9-ல் தொடங்கி மே.31 வரை நடைபெறும் என்றும், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே.5ல் தொடங்கி மே.28 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17, +1 தேர்வு முடிவுகள் ஜூன் 7, +2 தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆகிய தேதிகளில் வெளியாகும்.
பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் .