மெஜார்ட்டி இருந்தும் தி.மு.க. தோல்வி…. மணப்பாறையில் பரபரப்பு!

0 604
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில், தி.மு.க.தலையிடம் தனது கட்சி வேட்பாளராக நகரச் செயலாளர் மைக்கேல்ராஜை அறிவித்தது. தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத 5 பேர் சுயேட்சையாக வெற்றிபெற்று, முதன்மைச்செயலாளர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் தி.மு.க. தரப்பு பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில்

இன்று சற்றுமுன் நடைபெற்ற மறைமுக வாக்கெடுப்பில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த பா.சுதா. என்பவர் 15 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.